ஆவணங்கள்

லண்டனில் உலக புரசியாளர்களின் கைகளில் நாம் தமிழரின் ஒலிவாங்கி! / 31-03-2024

நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி சின்னம் பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் வைத்து  பரப்புரை 

சீமானின் நாம் தமிழர் கட்சி இந்தியாவின் தமிழ் நாட்டில் ஒரு மாநில கட்சியாக இருக்கின்ற போதும் 
அது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கான கட்சியாகவே தமிழர்களால் பார்க்கப்படுகின்றது.
அதை நிரூபிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னமான ஒலிவாங்கி சின்னத்தை உலக புகழ்பெற்ற பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் வைத்து பரப்புரை செய்தனர் 
தமிழ் நாட்டிற்கும் பிரித்தானியாவிற்கும் தொடர்பில்லாத போதும் தற்போதிருக்கும் சமூக ஊடகங்கள் வழியாக அது தமிழக மக்களை வந்தடையும், அது புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு போக பேருதவி பண்ணும் என்ற நம்பிக்கையில் முன்னெடுத்திருந்தனர்.