Apr 102024

Apr 102024

தேர்தல் பரப்புரைக்கான திரள் நிதிக்குப் பங்களிக்க சீமான் மக்களிடம் கோரிக்கை

தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடந்து வரும் இந்த நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தமக்கு இருக்கிற வளங்களுக்கு ஏற்ப தமது முழு உழைப்பையும் கொட்டி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்தியத் தேசியக்கட்சிகளிடமோ திராவிடக்கட்சிகளிடமோ இல்லாத அளவு தன்னார்வலராக உழைக்கும் தொண்டர்கள் நாம் தமிழரிடம் அதீதமாக இருந்தாலும் மற்றக் கட்சிகளிடம் இருக்கிற பண பலம் நாம் தமிழரிடம் இல்லாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே.   பிற கட்சிகள் வாக்குக்கே பணம் கொடுக்கும் அளவு பண பலம் படைத்தவர்களாக இருக்கையில் நாம் தமிழர்  தொண்டர்கள் பரப்புரைக்குத் தேவையான அடிப்படைச் செலவுகளைக் கூட மக்களிடம் இருந்து பெற்ற திரள் நிதித் திரட்டல் மூலமாக பெற்றுக் கொண்டு முழு வீரியத்துடன் பரப்புரை செய்து வருகின்றனர்.  அவர்களை மேலும் பலப்படுத்தவும் பரப்புரையை வேகப்படுத்தவும் உலகம் முழுதும் உள்ள தமிழ் மக்களிடம் நாம் தமிழரானது திரள் நிதித் திரட்சிக்கு பங்களிக்குமாறு கோரியுள்ளார்.