Apr 102024

நாம் தமிழர் காளியம்மாளைப் பற்றி போலியான தகவல் பரப்ப முயலும் திமுக!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1000 ரூபாய் பெற்ற பெண்களை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் கொச்சைப் படுத்தி பேசியதாக திமுகவினர் இணையத்தில்  பரப்பி வருகின்றனர். "ஆயிரம் ரூபாய்க்கு பிறந்தவர்கள்" என்று அவர் பேசும் அந்த சிறிய காணொளியை மட்டும் திமுக கட்சியினர் வெட்டி அதை பரப்பி வருகின்றனர். உண்மையில் அவர் பேசிய முழுக்காணொளியில் 1000 ரூபாய் வாங்கிய பெண்களை எங்கும் அவர் தரக்குறைவாக பேசவில்லை. 1000 ரூபாயை கொடுத்து விட்டு அதை சொல்லிக்காட்டியே வாக்குக் கேட்கும் திமுக கட்சியினரையே அவர் "1000 ரூபாய்க்கு பிறந்தவர்கள்" என விமர்சித்திருந்தார்.